தேவையான பொருட்கள் சுரைக்காயின் மேல்தோலைக் கெட்டியாகச் சதையுடன் எடுத்து நறுக்கிக் கொள்ளவும். பொடியாக நறுக்கி, எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். தண்ணீர் விடாமல் அல்லது ஆவியில் வைத்தும் வேக வைக்கலாம்.
வறுக்கத் தேவையானவை உளுத்தம் பருப்பு - நான்கு தேக்கரண்டி கடுகு - 1/2 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 5 பெருங்காயம் - சிறிதளவு தேங்காய் (துருவியது) - தேவைக்கேற்ப உப்பு - தேவைக்கேற்ப புளி - சிறிதளவு கொத்துமல்லி - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை வாணலியில் மூன்று மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு வறுக்க வேண்டியவற்றை வறுத்துக் கொள்ளவும். பின் வதக்கிய சுரைக்காய், வறுத்த சாமான்கள், புளி, உப்பு, வறுக்காத தேங்காய்த் துருவல், கொஞ்சம் பச்சைக் கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும் தேவையானால் சிறிது வெல்லம் சேர்க்கலாம். இந்தச் சட்னி பொரிச்ச குழம்பு, சப்பாத்தி, மோர் சாதம், தேசையுடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
பார்வதி ராமன், ரிச்மாண்ட், வர்ஜீனியா |