தகவி
குழந்தைகளை மகிழ்விக்க வருகிறது 'தகவி'. குழந்தைகள் சாய், சஞ்சய், பவாஸ், குகன், ஆதிசக்தி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 'நான் கடவுள்' ராஜேந்திரன் நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார். ராகவ், ஜெய்போஸ் இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, சிங்கம்புலி, அஜய் ரத்தினம், வையாபுரி, பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோர் முக்கிய வேடமேற்றுள்ளனர். கதை-வசனத்தை எம்.சக்திவேல் எழுத, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் சந்தோஷ்குமார். கவிஞர் பிறைசூடனின் மகன் தயானந்த் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மாஸ்கோ படவிழா, நவடா சர்வதேசப் படவிழா, பாரத் சர்வதேசப் படவிழா, மராட்டிய சர்வதேசப் படவிழா எனப் பல விழாக்களில் விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது இப்படம்.

-

© TamilOnline.com