கூகுள் குட்டப்பன்
மலையாளத்தில் வெளியாகிப் பெரும் வெற்றிபெற்ற படம் 'ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25' இப்படம் இப்போது 'கூகுள் குட்டப்பன்' என்று தமிழில் தயாராகிறது. தர்ஷன் நாயகனாக நடிக்க, லாஸ்லியா நாயகி. கே.எஸ். ரவிகுமார் படத்தைத் தயாரிப்பதுடன் கதாநாயகனின் தந்தை வேடத்தில் நடிக்கிறார். உடன் யோகிபாபு, ராகுல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ரவிக்குமாரிடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றிய சரவணன் - சபரி இருவரும் இணைந்து இப்படத்தை இயக்குகின்றனர். இசை ஜிப்ரான்.

அரவிந்த்

© TamilOnline.com