கணிதப் புதிர்கள்
1. 9, 7, 8, 7, 7, 7, 6 ... வரிசையில் அடுத்து வரவேண்டிய எண் எது, ஏன்?

2. 1 முதல் 9 வரையுள்ள எண்களை ஒருமுறை மட்டும் பயன்படுத்தி, கூட்டி மற்றும் கழித்து விடையாக எண் 100 வரச்செய்ய வேண்டும். இயலுமா?

3. 19 + 37 = 56; இதனை (1 x 9) + (3 x 7) = 5 x 6; (9 + 21 = 30) என்று சமன்பாட்டை மாற்றி எழுதினாலும் இருபுறமும் மாறாத ஒரே எண் விடையாகக் கிடைக்கிறது (30). இதே போன்ற சமன்பாடுகள் சிலவற்றை உங்களால் கூற இயலுமா?

4. சில வருடங்களுக்கு முன்பு ராமு, சோமு இருவரின் எடையும் 10:12 என்ற விகிதத்தில் இருந்தது. தற்போது அவர்களின் எடை விகிதம் 8:10 ஆக இருப்பதுடன் ராமுவின் எடை முன்பைவிட 4 கிலோ அதிகமாகவும், சோமுவின் எடை 6 கிலோ அதிகமாகவும் உள்ளது என்றால், தற்போது இருவரது தனித்தனி எடை என்ன?

5. அது ஒரு நான்கு இலக்க எண். அதில் முதல் இரண்டு இலக்கங்களின் கூட்டுத்தொகை ஏழு. இரண்டு மற்றும் மூன்றாம் இலக்க எண்களின் கூட்டுத்தொகையும் ஏழு. மூன்று மற்றும் நான்காம் எண்களின் கூட்டுத்தொகையும் ஏழு. முதல் மற்றும் இறுதி இலக்க எண்களின் கூட்டுத்தொகையும் ஏழு என்றால் அந்த எண் எது? அதே போன்ற வேறு எண் எது?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com