பிரெட் வடை
தேவையான பொருட்கள்
பிரெட் துண்டுகள் - 4
கடலைப்பருப்பு - 2 மேசைக்கரண்டி
அரிசி - 2 தேக்கரண்டி
மக்காச்சோள (கார்ன்) மாவு - 1 தேக்கரண்டி
வெங்காயம் (நறுக்கியது) - 1 கிண்ணம்
இஞ்சி - சிறிதளவு
பச்சைமிளகாய் - 2
மிளகாய்வற்றல் - 4
கொத்துமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை
கடலைப் பருப்பு, அரிசியை ஊறவைத்துக் கொரகொரப்பாக அரைக்கவும். பிரெட் துண்டுகளை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, உப்பு எல்லாம் போட்டு, மக்காச்சோள மாவும் சேர்த்து, அத்துடன் கொத்துமல்லி, கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கிப் போட்டு நன்றாகக் கலக்கவும். வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். இது மிகவும் சுவையான வடை. கெச்சப் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.

அமரர் தங்கம் ராமசாமி,
பிரிட்ஜ் வாட்டர், நியூஜெர்ஸி

© TamilOnline.com