பொட்டுக்கடலை பச்சடி
தேவையான பொருட்கள்
பொட்டுக்கடலை - 1 கிண்ணம்
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - சிறிதளவு
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் - 2
தயிர் - 2 கிண்ணம்
எண்ணெய் - தாளிக்க
சீரகம் - 1 தேக்கரண்டி

செய்முறை
பொட்டுக்கடலை, உளுத்தம்பருப்பு இரண்டையும் சிவக்க வறுத்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். தயிரில் உப்புப் போட்டு இந்த மாவைக் கரைத்துக் கொண்டு கடுகு, மிளகாய், சீரகம், பெருங்காயம் தாளிக்கவும். இது டாங்கர் பச்சடிபோல சூப்பர் சுவையாக இருக்கும்

அமரர் தங்கம் ராமசாமி,
பிரிட்ஜ் வாட்டர், நியூஜெர்ஸி

© TamilOnline.com