முதலாவது சிலிக்கான் வேலி ஓப்பன் செஸ் போட்டிகள்
2021 மே 22 - 23 தேதிகளில் முதலாவது சிலிக்கான் வேலி ஓப்பன் செஸ் போட்டிகள் மில்பிடாஸில் உள்ள சோனஸ்டா ஹோட்டலில் நடத்தப்பட்டன. இத்தொடரின் இயக்குநராக ரேகா ஸ்டரே பணியாற்றினார். இண்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் மற்றும் உயர்நிலை இளையோர்கள் என இதில் நூறுக்கு மேற்பட்டோர் போட்டியிட்டனர்.

இந்தப் போட்டிகளை ஏற்பாடு செய்த சான் ஹோசே செஸ் கழகம் 8ம் வகுப்புப் படிக்கும் பிரணவ் சாயிராம் மற்றும் 9ம் வகுப்புப் படிக்கும் அபிநவ் பெனகலப்பட்டி ஆகியோரால் அக்டோபர் 2020ல் தொடங்கப்பட்டது. கோவிட் தொற்றின் கதவடைப்புக் காலத்தில் சதுரங்க ஆர்வலருக்கு விளையாட நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தி, சரியான முன்னெச்சரிக்கையுடன் போட்டிகளை நடத்தும் நோக்கத்துடன் இது தொடங்கப்பட்டது. இந்தப் போட்டியில் மொத்தம் $3900 பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

பிரணவ், ரேகா, அபிநவ்



முதன்மைப் பிரிவில் கேண்டிடேட் மாஸ்டர் வியோம் வித்யார்த்தி முதலிடத்தை வென்றார். ரிசர்வ் பிரிவில் ஜேவியர் சில்வா, மைக்கல் மலோடிக் மற்றும் இம்ரான் சம்ப்ஸி ஆகியோர் இணைந்து முதலிடத்தில் இருந்தனர்.

சங்கீதா,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com