கும்பாரி
அபி சரவணன் கதாநாயகன். மஹானா கதாநாயகி. ஜான் விஜய், பருத்திவீரன் சரவணன், மதுமிதா, சாம்ஸ், காதல் சுகுமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசை: ஜெயபிரகாஷ் - ஜெய்தன். கெவின் இயக்குகிறார். இப்படம் பற்றி இவர், "இந்தப் படம் காதல், காமெடி கலந்த ஆக்‌ஷன் படம். நாயகனின் காதலைச் சேர்த்துவைத்த பால்யகால மீனவ நண்பன் திடீரெனக் காணாமல் போகிறான். நண்பனை நாயகன் காப்பாற்றினாரா என்பது கதை" என்கிறார். தமிழ், மலையாளம் இரு மொழிகளிலும் உருவாகிறது இப்படம்.

அரவிந்த்

© TamilOnline.com