குருதி ஆட்டம்
அதர்வா கதாநாயகன். பிரியா பவானி சங்கர் கதாநாயகி. உடன் ராதாரவி, ராதிகா சரத்குமார், வட்சன் சக்ரவர்த்தி, வினோத் சாகர், பேபி திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'எட்டு தோட்டாக்கள்' என்ற மாறுபட்ட படத்தை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்குகிறார். இசை: யுவன் சங்கர்ராஜா. இயக்குநர், "இது, அதிரடி சண்டைக் காட்சிகளைக் கொண்ட இரண்டு தாதாக்களின் கதை. மதுரையைக் கதைக்களமாகக் கொண்ட படம். அதர்வாவுக்கும், ராதாரவிக்கும் இடையே நடக்கும் மோதல்கள்தான் திரைக்கதை. 'எட்டு தோட்டாக்கள்' போல், இந்தப் படமும் ஒரு புதிய அனுபவத்தை தரும்" என்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com