தேவையான பொருட்கள் பொட்டுக்கடலை - 100 கிராம் துவரம்பருப்பு - 1/2 கிண்ணம் கடலைப்பருப்பு - 1/4 கிண்ணம் உளுத்தம்பருப்பு - 2 மேசைக்கரண்டி பச்சை மிளகாய் - 4 வற்றல் மிளகாய் - 4 பெருங்காயம் - சிறிதளவு இஞ்சி - சிறிதளவு வெங்காயம் (நறுக்கியது) - 1/4 கிண்ணம் கொத்துமல்லி - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் பொரிக்க
செய்முறை பருப்புகளை ஊற வைத்து, உப்பு, மிளகாய், பெருங்காயம், இஞ்சி போட்டு கொரகொரப்பாக அரைக்கவும். பொட்டுக்கடலையை அதிகம் ஊற வைக்காமல் ஒன்றிரண்டாக அரைத்து, எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, வெங்காயம், கொத்துமல்லி, கறிவேப்பிலை போட்டுக் கலந்து பிசைந்து கொள்ளவும். இதை வடையாகத் தட்டி, எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். தேங்காய்ச் சட்னி, கெச்சப் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். இப்படி ஒரு வடையைச் சுவைத்திருக்கவே மாட்டீர்கள்.
அமரர் தங்கம் ராமசாமி, பிரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்ஸி |