இந்தியர்களை நான் மிக மதிக்கிறேன்
அனு நகர்மன்ற உறுப்பினர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகப் பொருத்தமே. அவர், இதற்கு முன் பல வருடங்களாக நகரத் திட்டப் பணிக்குழுவில் சிறப்புறத் தொண்டாற்றியுள்ளார். அனுவின் கல்வியும் அனுபவமும், நகர நிர்வாகத்திற்கு இயல்பான பொருத்தமாய் அமைந்து விட்டன. இந்தப் பதவிக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அவர் மிகப் பெரிய சாதனைகளைச் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. நகர்மன்றக் குழுவிற்கே பெருமை சேர்ப்பவராய் அனு விளங்குவார் என்பதில் ஐயமில்லை.

நான் நகரவைத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதால், காலியான உறுப்பினர் பதவிக்கு நகர நிர்வாகத்தினரால் அனு நடராஜன் தேர்ந்தெடுக்கப் பெற்றார். காரணம் அவரின் சிறப்பான முந்தைய செயல்பாடு. இப்பதவிக்காலம் அடுத்த வருடம் வரை நீடிக்கும். 2006ம் வருடம் நகர மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க மக்கள் வாக்களிப்பர். அனு வெற்றிபெற வேண்டுமென்றால் இந்திய சமூகத்தினர் பெருவாரியாக வந்து அவருக்கு வாக்களிக்க வேண்டும்.

இந்தியர்களை நான் மிகவும் மதிக்கிறேன். நீங்கள் அறிவாற்றல் மிக்கவர்கள், கடின உழைப்பாளிகள், படைப்பாளிகள். நகரில் நடக்கும் பல நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்கிறீர்கள். உங்களைப் போன்று ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுபவர்கள், மற்ற சிறுபான்மையினரைப் போன்று, வாக்களிப்பு, நிர்வாகம், நகர வளர்ச்சிக்கான தொண்டூழியம், அரசியல் போன்றவற்றில் மேன்மேலும் அக்கறை யுடன் பங்கேற்க வேண்டும். அப்பொழுது தான், அனு நடராஜன் போன்ற இன்னும் பலர் தேர்ந்தெடுக்கப் பெற்று, ·ப்ரீமான்ட்டின் வளர்ச்சிக்கு நேரடி யாகச் சேவை செய்யலாம். இதுவே என் எதிர்பார்ப்பும் கூட.

© TamilOnline.com