கணிதப் புதிர்கள்
1. 1997, 1999, 2003, ?, 2017, 2027, 2029 ...
கேள்விக்குறி உள்ள இடத்தில் வர வேண்டிய எண் எது, ஏன்?

2. ரமேஷ் போட்டித் தேர்வு ஒன்றை எழுதினான். அதில் மொத்தம் 100 கேள்விகள் இருந்தன. அவன் எல்லாக் கேள்விகளுக்கும் விடையளித்தான். சரியான விடைக்கு 1 மதிப்பெண். ஆனால், தவறான ஒவ்வொரு விடைக்கும் 2 மதிப்பெண்கள் கழிக்கப்பட்டன. ரமேஷ் மொத்தம் 70 மதிப்பெண்கள் பெற்றிருந்தான் என்றால், அவன் எத்தனை கேள்விகளுக்குச் சரியான விடையளித்திருப்பான்?

3. 10 புறாக்கள் 10 கிண்ணங்களில் உள்ள தானியங்களைச் சாப்பிட 10 நிமிட நேரம் எடுத்துக் கொள்கின்றன. அப்படியென்றால் நூறு புறாக்கள், நூறு கிண்ணங்களில் உள்ள தானியங்களைச் சாப்பிட எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளும்?

4. 5 + 2 = 37 ; 8 + 5 = 313; 9 + 8 = 117 என்றால் 9 + 5 = ?

5. 3, 5, 8, 13, .... வரிசையில் அடுத்து வரவேண்டிய எண் எது, ஏன்?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com