பாம்பே கச்சோரி
தேவையான பொருட்கள்
பயத்தம் பருப்பு - 1 கிண்ணம்
தேங்காய்த்துருவல் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
தனியா - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
மைதா மாவு - 1 கிண்ணம்
கோதுமை மாவு - 1/2 கிண்ணம்
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை
பயத்தம்பருப்பை நன்றாக, சிவப்பாக வெறும் வாணலியில் வறுத்து, தேங்காய்த் துருவலையும் சேர்த்து வறுத்து, மிக்ஸியில் சற்றுக் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பிறகு உப்பு, காரப்பொடி, கரம் மசாலாப் பொடி, சீரகப் பொடி போட்டு, சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். மைதா, கோதுமை மாவுடன் உப்பு போட்டுப் பிசைந்து உருண்டைகளாக உருட்டி, உள்ளங்கை அளவு சிறு சிறு அப்பளம் இட்டு, நடுவில் பருப்புத் தூளைச் சிறு கரண்டியால் வைத்து, பூரணம் வெளியில் வராமல் துளி தண்ணீர் தொட்டு மூடவும். எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். சுவையான கச்சோரி தயார்!

அமரர் தங்கம் ராமசாமி,
பிரிட்ஜ் வாட்டர், நியூஜெர்ஸி

© TamilOnline.com