கடலைப்பருப்பு சமோசா
தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு - 1 கிண்ணம்
தேங்காய்த்துருவல் - 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
மைதா - 1/2 கிண்ணம்
கோதுமை மாவு - 1/2 கிண்ணம்
மக்காச்சோள (கார்ன்) மாவு - 3 தேயிலைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
பெருங்காயம் - சிறிதளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை
கடலைப்பருப்பை உப்புப் போட்டு ரொம்பவும் குழையாமல் வேகவிடவும். பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டுச் சேர்த்துக் கலக்கவும். கெட்டியாக வைத்துக்கொண்டு மைதா, கோதுமை, மக்காச்சோள மாவுகளைக் கலந்து, சிறிது உப்புப் போட்டு, துளி எண்ணெய், தண்ணீர் விட்டுப் பிசைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.

மாவைச் சிறு உருண்டையாக உருட்டி, உள்ளங்கையில் அப்பளக் குழவியால் இட்டு, நடுவில் பூரணம் வைத்து, முக்கோணமாக மடித்து சமோசா செய்யவும். எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

சமோசாவைக் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். கெச்சப் தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.

அமரர் தங்கம் ராமசாமி,
பிரிட்ஜ் வாட்டர், நியூஜெர்ஸி

© TamilOnline.com