சங்கர நேத்ராலயா
உலகின் சிறந்த 3 கண் மருத்துவமனைகளில் ஒன்று

சங்கர நேத்ராலயாவை 2021ம் ஆண்டிலும் உலகின் சிறந்த கண் மருத்துவமனையாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூஸ் வீக் பத்திரிகை தேர்ந்தெடுத்துள்ளது.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற 'நியூஸ் வீக்' இதழ், 42 வருடங்களாகக் கண் சிகிச்சை, ஆராய்ச்சி, கல்வி மற்றும் சமூக மருத்துவ சேவை போன்றவற்றில் சிறந்து விளங்கும் சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையை, உலகின் மிகச்சிறந்த 3 கண் மருத்துவமனைகளில் ஒன்றாகவும், இந்தியாவின் முதல் மருத்துவமனையாகவும் தேர்ந்தெடுத்துள்ளது.

'கண்களின் ஆலயம்' பாரத முன்னாள் குடியரசுத்தலைவர் அமரர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களால் முன்மொழியப்பட்டு இன்று உலகெங்கிலும் அறியப்படும் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை, 1978ம் வருடம் ஒரு மத்தியதரக் குடும்பத்தில் பிறந்து பத்மபூஷண் விருது பெறும் அளவுக்குத் தனது சேவை மனப்பான்மையினால் உயர்ந்த டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் அவர்களால், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அறிவுரையின்படி தொடங்கப்பட்ட நிறுவனம் ஆகும்.



இது உலகத்தரம் வாய்ந்த கண் சிகிச்சையை அனைவரும் ஏற்கும் கட்டணத்தில், லாப நோக்கின்றி வழங்குகிறது. இங்கே ஏழை எளியோருக்கு சிகிச்சை முற்றிலும் இலவசம். தவிர, கண் மருத்துவம் மற்றும் மருத்துவம்சார் கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துகிறது.

இங்கு வரும் நோயாளிகளில் 55% பேருக்கு வெளிநோயாளிப் பராமரிப்பும் 40% பேருக்கு அறுவை சிகிச்சைகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய நோய்த்தொற்று காலத்திலும் தனது சேவையை இடையறாது ஆற்றிவரும் சங்கர நேத்ராலயாவின் சேவைகளுக்கு நீங்களும் உதவமுடியும்.

உதவும் முறைபற்றி அறிய: www.sankaranethralayausa.org

விருது பற்றிய விவரங்கள்: www.newsweek.com

தகவல்: முனைவர் அ போ இருங்கோவேள்,
சென்னை

© TamilOnline.com