வாசகர் கைவண்ணம் : தஞ்சாவூர் பருப்பு உசிலி
தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு - 1 கிண்ணம்
கடலைப் பருப்பு - 1/2 கிண்ணம்
மிளகாய் வற்றல் - 5
உப்பு - தேவைக்கேற்ப
பெருங்காயம் - 1 சிட்டிகை
கருவேப்பிலை, கொத்தமல்லி
எண்ணெய் - 150 கிராம்

செய்முறை

துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகாய், உப்பு, கருவேப்பிலை, கொத்த மல்லி ஆகியவற்றை மிக்ஸியில் அதிகம் தண்ணீர் விடாமல் நறநறவென்று அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் சுமார் 5 ஸ்பூன் எண்ணெய் விட்டு (எண்ணெய் காயக்கூடாது) மிதமான சூட்டில் இருக்கும் போதே அரைத்த பருப்பு விழுதைப் போட்டுக் கிளறவும். கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய்விட்டு கிளறிக் கொண்டு வந்தால் உசிலி பொன்னிறமாக மாறி, நன்றாக வெந்து (மொறுமொறுவென்று உதிரியாக இல்லாமல்) மெத்தென்று மிக நன்றாக இருக்கும்.

தேவையானால் உசிலிக்குச் சேர்க்கும் பீன்ஸ், கொத்தவரை போன்ற காய்கள் சேர்க்கலாம். விரும்பினால் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து உசிலியுடன் சேர்க்கலாம். நல்லெண்ணையில் செய்தால் மிக நன்றாக இருக்கும். சாதத்தில் பிசைந்தோ, தொட்டுக் கொண்டோ சாப்பிடலாம்.

கமலா சுப்ரமணியம்

© TamilOnline.com