நின்று கொல்வான்
இசையில் வல்ல கதாநாயகி, கச்சேரி ஒன்றிற்காக கோவா செல்லும் போது கடத்தப்படுகிறார். அவரைக் கடத்தியது யார், ஏன் என்பதை அறிய அவரது காதலன் களமிறங்குகிறார். அவருக்குத் தெரியவரும் உண்மைகள் அதிர்ச்சி அளிக்கின்றன. இந்த விவரத்தை அதிரடி ஆக்‌ஷன் கலந்து சொல்ல வருகிறது இப்படம். படத்தில் அர்ஜுன் சந்த்ரா, யோகி பாபு, ஆசிஷ் வித்யார்த்தி, நிழல்கள் ரவி, கர்ணா டோக்ரா, கீதா ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். பாடல்களை வைரமுத்து எழுத, ஜூடா சாண்டி இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தை வி.பி. சங்கர் இயக்கியுள்ளார்.

அரவிந்த்

© TamilOnline.com