முன்னா
தெருக்களில், சாலைகளில் தன் உடலை ரத்தம் வரச் சாட்டையால் அடித்துக்கொண்டு அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கை நடத்துகிறான் கதாநாயகன். பணக்காரனாக வேண்டும், வாழ்க்கையை விதவிதமாக அனுபவிக்க வேண்டும் என்று அவன் ஆசைப்படுவதில் தப்பில்லையே. முயல்கிறான். ஆசைப்பட்டபடியே ஒரு வாழ்க்கை அவனுக்கு அமைகிறது. அந்த வாழ்க்கை அவனுக்குத் தந்தது என்ன என்பதைச் சொல்ல வருகிறது முன்னா. சங்கை குமரேசன் நாயகனாக நடித்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதியிருப்பதும் இவரே! நியா கிருஷ்ணா, ரம்யா, ராஜு, சிந்து, ராஜாமணி, சண்முகம், வெங்கட் உள்ளிட்ட பலர் உடன் நடித்துள்ளனர். இசை டி.ஏ. வசந்த். பின்னணி இசை சுனில் லாசர். "நல்ல கருத்துள்ள படங்களுக்கு மக்கள் எப்போதும் ஆதரவு அளிப்பார்கள் அதேபோல் 'முன்னா' படமும் மக்களின் ஆதரவோடு வெற்றிபெறும்" என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் இயக்குநர்.

அரவிந்த்

© TamilOnline.com