யுவபுரஸ்கார்
35 வயதுக்குட்பட்ட இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் சாகித்ய அகாதமியின் யுவபுரஸ்கார் விருதை 'மரநாய்' என்ற கவிதைத் தொகுப்புக்காகப் பெறுகிறார் எழுத்தாளரும் கவிஞருமான ஷக்தி. திருத்துறைப்பூண்டியில் பிறந்து வளர்ந்த இவர், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவ மேல்படிப்பு முடித்தவர். புற்றுநோய் கதிரியக்கச் சிகிச்சையாளராகப் பணிபுரிகிறார் 'கொண்டல்' (நாவல்), 'அபார்ஷனில் நழுவிய காரிகை' போன்றவை இவரது பிற படைப்புகள்.

டாக்டர் அ. மங்கை, டாக்டர் சி. சேதுபதி, எழுத்தாளர் சிவகாமி உள்ளிட்ட நடுவர் குழு இப்படைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளது. விருது செப்புப் பட்டயமும் 50,000 ரூபாய் பரிசுத்தொகையும் அடங்கியது.

ஷக்திக்குத் தென்றலின் வாழ்த்துகள்

© TamilOnline.com