அம்மா உணவகம்
இப்படி ஒரு தலைப்பில் இந்தப் படம் தயாராகி வருகிறது. அஸ்வின் கார்த்திக், சசிசரத் இருவரும் கதாநாயகர்களாகவும், ஸ்ரீநிதி நாயகியாகவும் நடிக்கின்றனர். உடன் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், சரவண சக்தி, சிவா, இந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பார்வையற்றவர் வேடத்தில் இயக்குநர் சுப்பிரமணிய சிவா நடித்துள்ளார். 'வசந்தம் வந்தாச்சு', 'பாசக்காரப் பய' போன்ற படங்களின் இயக்குநரான விவேகபாரதி, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார். படம்பற்றி இவர், "மனிதநேயமும் சமூக அக்கறையும் கொண்ட ஒருவர் விளிம்புநிலை மனிதர்கள் சிலருக்கு அடைக்கலம் கொடுக்கிறார். மேலே என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை" என்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com