ருத்ரன்
படத்தில் ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நாயகன், நாயகியாக நடிக்கின்றனர். உடன் நாசர், பூர்ணிமா ஜெயராம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதையைக் கே.பி. திருமாறன் எழுத, ஃபைவ் ஸ்டார் எஸ். கதிரேசன் இயக்குகிறார். இவர், பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்தவர். முதன்முதலாக இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். அதிரடி ஆக்‌ஷன் படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து. இசை: ஜீ.வி. பிரகாஷ் குமார்.

அரவிந்த்

© TamilOnline.com