பேச்சிலர்
ஜீ.வி. பிரகாஷ்குமார் நாயகனாக நடிக்கும் படம் இது. கதாநாயகி திவ்யபாரதி. உடன் பகவதி பெருமாள், அருண்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இயக்குநர் சசியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சதீஷ் செல்வகுமார் இப்படத்தை இயக்குகிறார். "கோயம்புத்தூரில் இருந்து பெங்களூர் வந்து ஐ.டி. கம்பெனியில் வேலை செய்யும் ஒரு இளைஞனின் வாழ்வில், ஒரு பெண் குறுக்கிடுகிறாள். என்ன நடக்கிறது என்பதுதான் படம். இளைஞன், வளர்ந்த ஆண்மகன் என ஜீ.வி. பிரகாஷ்குமார் இப்படத்தில் இருவிதத் தோற்றங்களில் அற்புதமாக நடித்துள்ளார்." என்கிறார் இயக்குநர். இசை ஜீ.வி. பிரகாஷ்குமார்.

அரவிந்த்

© TamilOnline.com