தேவையான பொருட்கள் தினைமாவு (லேசாக வறுத்தது) - 2 கிண்ணம் அரிசிமாவு - 1/2 கிண்ணம் கடலைமாவு - 1 கிண்ணம் பொட்டுக்கடலைமாவு - 1 தேக்கரண்டி மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி எள் - 1 தேக்கரண்டி புதினா (நைசாக அரைத்தது) - 1 மேசைக்கரண்டி தேங்காய்த் துருவல் (நைசாக அரைத்தது) - 1 மேசைக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி எண்ணெய் - பொரிப்பதற்கு.
செய்முறை ஒரு பாத்திரத்தில் எல்லா மாவுகளையும், எள், உப்பு, வெண்ணெய், அரைத்த புதினா, தேங்காய் விழுது எல்லாம் போட்டு தண்ணீர் விட்டுப் பிசையவும். எண்ணெய் காய்ந்ததும், மாவை ரிப்பன் அச்சில் போட்டுப் பிழியவும். பொன்னிறமாகப் பொரித்து எடுத்துச் சாப்பிடலாம்.
தங்கம் ராமசாமி, நியூஜெர்ஸி
★★★★★
தென்றல் இதழின் தொடக்க காலத்திலிருந்து சமையல் குறிப்புகளும் சிறுகதைகளும் தொடர்ந்து எழுதி வந்துள்ள திருமதி தங்கம் ராமசாமி (82) அவர்கள் 2021 பிப்ரவரி 17 அன்று காலமானார் என்றறிந்து வருந்துகிறோம். அவருக்கு நமது நன்றி கலந்த அஞ்சலி. |