தேவையான பொருட்கள் துருவிய முள்ளங்கி - 1 கிண்ணம் தினைமாவு - 1 கிண்ணம் அரிசிமாவு - 1/4 கிண்ணம் கடலைமாவு - 1 மேசைக்கரண்டி பொட்டுக்கடலைமாவு - 2 தேக்கரண்டி தேங்காய்த் துருவல் - 1/4 கிண்ணம் மிளகாய்த்தூள் - 2 மேசைக்கரண்டி எள் - 1 தேக்கரண்டி வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - பொரிக்க.
செய்முறை தினைமாவை லேசாக வறுத்துக்கொள்ளவும். அத்துடன் அரிசிமாவு, பொட்டுக்கடலை மாவு, கடலை மாவு, முள்ளங்கி, எண்ணெய், உப்பு, கறிவேப்பிலை எல்லாம் சேர்க்கவும். அதில் தேங்காய், பச்சைமிளகாய் நைசாக அரைத்து விட்டு, தண்ணீர் விட்டுப் பிசையவும். எண்ணைய் காய்ந்ததும், உள்ளங்கையால் மாவை எண்ணெய் தொட்டுத் தட்டிப் போட்டுப் பொரித்து எடுக்கவும். பச்சை மிளகாய் அல்லது மிளகு சீரகம் போட்டும் செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
தங்கம் ராமசாமி, நியூஜெர்ஸி
★★★★★
தென்றல் இதழின் தொடக்க காலத்திலிருந்து சமையல் குறிப்புகளும் சிறுகதைகளும் தொடர்ந்து எழுதி வந்துள்ள திருமதி தங்கம் ராமசாமி (82) அவர்கள் 2021 பிப்ரவரி 17 அன்று காலமானார் என்றறிந்து வருந்துகிறோம். அவருக்கு நமது நன்றி கலந்த அஞ்சலி. |