Renton Kreations: யூட்யூப் வழியே இலக்கிய நிகழ்ச்சிகள்
Renton Kreations - Entertain , Educate, Engage and Elevate

வாஷிங்டன் மாகாணத்திலிருந்து இயங்கிவரும் ரென்டன் க்ரியேஷன்ஸ் (Renton Kreations) என்ற யூட்யூப் ஓடை மக்களிடையே தமிழார்வத்தைத் தூண்டும் பட்டிமன்றங்கள் மற்றும் விவாத மேடைகளை நடத்திவருகிறது.

கொரோனா நேரத்தில் வீட்டில் முடங்கி இருக்காமல் உலகளாவிய பார்வையை நம் முன்னே கொண்டு வரும் முகமாக இவ்வோடை பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன் நிகழ்ச்சிகளில் ஒருசில உங்கள் பார்வைக்கு...

பெற்றோருடன் உறவு பலமாக இருப்பது இந்தியாவிலா? அமெரிக்காவிலா ?
அமெரிக்க, இந்திய குழந்தைகள் பங்கேற்ற ஒரு பட்டிமன்றத்தில் 'பெற்றோருடன் உறவு பலமாக இருப்பது அமெரிக்காவிலா? இந்தியாவிலா?' என்று காரசாரமாக வாதிட்டனர். நடுவராக ஜார்ஜியாவிலிருந்து தமிழார்வலர் ஜெயா மாறன் பங்கேற்றுச் சிறப்பித்தார். இந்தியக் குழந்தைகளுடன் நம் குழந்தைகள் பேசிப்பழக நல்லதொரு வாய்ப்பாக இந்தப் பட்டிமன்றம் அமைந்தது.



★★★★★


உங்களுக்கு பிரியமான " Device" உங்களுக்கு வரமா? தொல்லையா?
'கருவிகள் (devices) வரமா? சாபமா?' என்று 10-12 வயதுக் குழந்தைகள் அனல் பறக்க விவாதித்தனர். அமெரிக்காவாழ் குழந்தைகள் பேசும் கொஞ்சுதமிழ் மிகவும் இனிமை.



★★★★★


"மோகனசுந்தரம் எனும் நான்"


கவிஞர் மோகனசுந்தரம் தலைமையில் நடந்த வித்தியாசமான நிகழ்ச்சியில் 'திடீரென்று காலையில் எழுந்திருக்கும்போது வேறு உருவமாக மாறினால்' என்ற கற்பனை பேசினர். வைரஸ், வேக்ஸின், காகம், செல்ஃபோன் என மாறியதாகப் பேசியது மிகவும் சுவாரஸ்யம்.



★★★★★


குடும்பத்தின் big boss யாரு?


பொங்கலை முன்னிட்டு 'பேசும் பூங்காற்று' கவிதா ஜவஹர் தலைமையில் சிறப்பு விவாதமேடை நடந்தது. இதில் 'குடும்பத்தின் Big Boss யார் - கணவனா? மனைவியா? பிள்ளைகளா?' என 12 பெண்கள் பேசினார்கள். ஒரு குடும்பத்தை நன்முறையில் நடத்திச் செல்லக் கணவனும் மனைவியும் பிள்ளைகளும் எப்படியெல்லாம் உழைக்கின்றனர் என்று சங்ககாலத்தில் தொடங்கி, நிகழ்காலம்வரை எடுத்துக்காட்டுகளுடன் கவிதா ஜவஹர் எடுத்துச் சென்ற விதம் அருமை. பன்னிருவரும் ஆழ்ந்த கருத்துக்களுடன் வாதங்களை முன்வைத்தனர்.



★★★★★


இவை மட்டுமல்லாமல், பாரம்பரிய சமையல் குறிப்புகள், கலைநிகழ்ச்சிகள் தோட்டக்கலை எனப் பல்வேறு காணொளிகளை இங்கே காணலாம். "உலகில் நீங்கள் எங்கிருந்தாலும் எமது நிகழ்ச்சிகளைப் பார்த்து, உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். நீங்களும் பங்குபெற விரும்பினாலும் தொடர்புக்கொள்ளலாம்" என்கின்றனர் இதன் அமைப்பாளர்கள்.

தொடர்புகொள்ள முகவரி: rentonkreations@gmail.com

செய்திக்குறிப்பில்இருந்து

© TamilOnline.com