வா பகண்டையா
இப்படி ஒரு மாறுபட்ட தலைப்பில் உருவாகியிருக்கிறது ஒரு திரைப்படம். விழுப்புரம் அருகே கிராமம் ஒன்றில் நடந்த உண்மைச் சம்பவம்தான் படத்தின் கதை. விஜய கணேஷ், ஆர்த்திகா நாயக, நாயகியாக அறிமுகமாகின்றனர். தமிழின் புதிய வில்லனாக நிழன் அறிமுகமாகிறார். மற்றொரு முக்கிய வில்லனாக ஹிந்தி நடிகர் யோகி ராம் நடிக்கிறார். உடன் மனோபாலா, ஆர். சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, மீரா கிருஷ்ணன், பவர் ஸ்டார் சீனிவாசன், காதல் சுகுமார், பிளாக் பாண்டி, போண்டா மணி, நித்திஷ் வீரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பாடல்கள் மற்றும் இசை எஸ்.ஏ. ராஜ்குமார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, படத்தை இயக்கியிருக்கிறார் ப. ஜெயகுமார். எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இறுதியாகப் பாடியுள்ள படம் இது.

அரவிந்த்

© TamilOnline.com