சில்லு வண்டுகள்
குழந்தைகளுக்கானத் திரைப்படங்கள் வருவது இன்றைக்கு மிக அரிதாகி விட்டது. அந்தக் குறையைப் போக்க வந்திருக்கிறது இப்படம். அருணாச்சலம், சாரங்கேஷ், சந்தோஷ் ராஜா, பூர்வேஷ், கிருஷ்ணா, மித்ரா, ரித்கிருத்தி, ஜோஸ்னா உள்ளிட்ட குழந்தை நட்சத்திரங்கள் இப்படத்தில் அறிமுகமாகின்றனர். முக்கிய வேடங்களில் இப்படத்தின் தயாரிப்பாளர்கள் தி.கா. நாராயணன் மற்றும் மா. குமார் பொன்னுச்சாமி நடித்துள்ளனர். உடன் கமலி, கார்த்திக், நிரஞ்சனி தனசேகரன், சீர்காழி பாலகுரு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சுரேஷ் K. வெங்கிடி. "இது முழுக்க முழுக்க குழந்தைகளைக் கொண்டு குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படம் என்பதைவிட பாடம் என்றுதான் சொல்லவேண்டும். வாழ்க்கையில் வளரவேண்டும் என்றால் தவறான வழிகளைப் பின்பற்றக் கூடாது என்பதை இதில் ஆழமாகச் சொல்லியிருக்கிறோம். தனது தம்பிக்காக கெட்ட வழிகளைத் தேர்ந்தெடுக்கும் ஒரு அண்ணனின் கதை இது. குழந்தைகள் மனநிலையில் சாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற பிரிவினைகள் இருக்கக்கூடாது. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும், உதவி செய்யும் எண்ணமும் உள்ளவர்களாக அவர்களை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை, குழந்தைகளை வைத்தே இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறோம்" என்கிறார் இயக்குநர். இசை: தேவா.

அரவிந்த்

© TamilOnline.com