மாயத்திரை
அசோக் கதாநாயகனாகவும், சாந்தினி தமிழரசன், ஷீலா ராஜகுமாரி, மேகாலி ஆகியோர் கதாநாயகிகளாகவும் நடிக்கும் படம் இது. இசை எஸ்.என். அருணகிரி. டி. சம்பத்குமார் இயக்கியிருக்கிறார். இவர், இயக்குநர்கள் பாலா, எழில், அகத்தியன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். "மாயத்திரை படத்தில் 26 நடிகர், நடிகைகள் பேயாக நடித்து இருக்கிறார்கள். தீங்கு செய்யாத பேயின் தியாகமும், பேரன்பும், குலதெய்வ வழிபாட்டின் சிறப்பும் படத்தில் இருக்கும். வில்லனும் பேய்தான். ஒரு தியேட்டரும் முக்கிய கதாபாத்திரமாக வருகிறது. பழிவாங்கலும், பயமுறுத்தலும் இல்லாத பேய்ப்படம் இது" என்கிறார் இயக்குநர்.

அரவிந்த்

© TamilOnline.com