தேவையான பொருட்கள் பரங்கிக்காய் துருவல் - 1 1/2 கிண்ணம் சர்க்கரை - 3/4 கிண்ணம் கடலை மாவு - 2 மேசைக் கரண்டி நெய் - 2 தேயிலைக்கரண்டி பால் - 1 கிண்ணம் ஏலக்காய்த்தூள் - சிறிதளவு பாதாம் தூள் - 2 தேக்கரண்டி கேசரி பவுடர் - சிறிதளவு முந்திரி - சிறிதளவு உலர் திராட்சை - சிறிதளவு
செய்முறை பரங்கிக்காய் துருவலை வாணலியில் நெய்விட்டு வதக்கவும். பாதி வதங்கியதும் கடலை மாவை நெய்யில் வறுத்து அதில் போட்டு, பாதாம் பொடியும் போட்டு, தண்ணீர் விட்டுக் குழைவாக வேகவிடவும். கேசரி பவுடர் போடவும். சர்க்கரை போட்டுக் கொதித்தவுடன் பாலை சுண்டக்காய்ச்சி அதில் விட்டு நன்கு கிளறவும். இறக்கிவைத்து, முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்துப் போடவும். ஃப்ரிட்ஜில் வைத்துச் சாப்பிடலாம். சுவையான கீர். பாயசம் போலவும் உபயோகிக்கலாம்.
தங்கம் ராமசாமி, ப்ரிட்ஜ்வாட்டர், நியூஜெர்ஸி |