சிவப்புப் பரங்கிக்காய் சுகியன்
தேவையான பொருட்கள்
பரங்கிக்காய் (தோல் சீவித் துருவியது) - 2 கிண்ணம்
கோதுமை மாவு - 1/2 கிண்ணம்
வெல்லம் - 1/2 கிண்ணம்
பாதாம் - 4
முந்திரிப் பருப்பு - 6
ஏலக்காய் - தேவைக்கேற்ப
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 கிண்ணம்
அரிசி - 1 மேசைக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை
அரிசி, உளுந்தை ஊறவைக்கவும். துருவிய பரங்கிக்காயை நெய் விட்டு வாணலியில் வதக்கவும். சுருள வரும்போது பாதாம், முந்திரி பொடிசெய்து அதில் போட்டு, தேங்காய்த் துருவலும் போடவும். கோதுமை மாவைப் போட்டு நீர் சுண்ட வதக்கவும். ஏலக்காய்ப் பொடி சேர்த்து, கெட்டியாகப் பூரணம் செய்துகொள்ளவும். ஊறிய அரிசியை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். அதில் சிட்டிகை உப்புப் போட்டு, பரங்கிப் பூரணத்தைச் சிறுசிறு உருண்டையாக வைத்துக் கொழுக்கட்டை போலச் செய்துகொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் உருண்டையை உளுந்து மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாகப் பொரிக்கவும். சூப்பர் சுகியன் தயார்.

தங்கம் ராமசாமி,
ப்ரிட்ஜ்வாட்டர், நியூஜெர்ஸி

© TamilOnline.com