AMMA: சின்னக்குயில் சித்ராவின் 'Embracing the World' மெல்லிசை
ஜனவரி 16, 2021 அன்று மாலை 6:30 (PST)/ 9:30 (EST) மணிக்கு மாதா அமிர்தானந்தமயி அவர்களின் உலகளாவிய மனிதாபிமானப் பணிகளைச் செய்யும் 'Embracing the World' திட்டத்துக்கு நிதி திரட்டுவதற்காக 'சின்னக்குயில்' பத்மஸ்ரீ K.S. சித்ரா அவர்களின் இணையவழி மெல்லிசைக் கச்சேரி நடைபெறும். நிகழ்ச்சியில் உங்கள் மனம் கவர்ந்த தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்திப் பாடல்கள் இடம்பெறும். நிகழ்ச்சியை வித்யா வோக்ஸ் தொகுத்து வழங்குவதுடன் இசைக்குயிலுடன் உரையாடுவார்.

உங்கள் வீட்டில் இருந்தபடியே இன்னிசை கேட்டு மகிழ்வதுடன் துன்புறுவோருக்கு உதவியும் செய்யுங்கள்.

மேலும் தகவலுக்கு: chithra@benfitconcerts.net
நுழைவுச்சீட்டு வாங்க: kschithra.net

செய்திக்குறிப்பில்இருந்து

© TamilOnline.com