ஹரீஷ் கல்யாண் கதாநாயகன். ப்ரியா பவானி சங்கர் கதாநாயகி. தெலுங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய 'பெல்லி சூப்பலு' என்ற படத்தின் தமிழ்ப்பதிப்பு இப்படம். காதலும், நகைச்சுவையும் கலந்து உருவாகி வரும் இப்படத்தை கார்த்திக் சுந்தர் இயக்குகிறார். தீபக் சுந்தர்ராஜன் வசனம் எழுதியிருக்கிறார். படம் பற்றி இயக்குநர், "படத்தின் கதைப்படி, ஹரீஷ் கல்யாண் பக்கத்து வீட்டுப் பையன் போல் இருப்பார். சமையல் கலையில் ஆர்வம் உள்ளவர். அம்மா, அப்பாவின் கட்டாயத்தால் எஞ்சினியரிங் படிக்கிறார். கதாநாயகி பிரியா பவானி சங்கர், எம்.பி.ஏ. பட்டதாரி. துணிச்சல் மிகுந்த பெண். சென்னையிலேயே 30 நாட்களில் படப்பிடிப்பு முழுவதையும் முடித்து விட்டோம்" என்கிறார். இசை : விஷால் சந்திரசேகர்.
தொகுப்பு: அரவிந்த் |