கோட்டா
டிரெக் இன்டர்நேஷனல் திரைப்பட விழா, கல்கத்தா இன்டர்நேஷனல் கல்ட் ஃபிலிம் ஃபெஸ்டிவல் உட்படப் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்ற படம் 'கோட்டா.' ஜி தமிழ் தொலைக்காட்சியின் ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 2-ல் வெற்றி பெற்ற பவாஸ், நிஹாரிகா ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்துப் புகழ்பெற்ற ஆதில், சஜி சுபர்ணா, செல்லா, 'மானஸி' நரேஷ், 'அப்பா' ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசை ஆலன் செபாஸ்டின். கதை மற்றும் இயக்கம் ப. அமுதவாணன். சிறந்த படம், சிறந்த எடிட்டிங், கதை, நடிப்பு போன்ற பல பிரிவுகளில் இதுவரை 43 சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கிறது இப்படம்.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com