கணிதப் புதிர்கள்
1. கேள்விக்குறியிட்ட இடத்தில் வரவேண்டிய எண் எது, ஏன்?
1=5, 2=10, 3=215, 4=3215, 5=?

2. கூட்டியோ, கழித்தோ, பெருக்கியோ, வகுத்தோ 'நான்கை' 16 முறை பயன்படுத்தி விடையாக ஆயிரம் வரச்செய்ய இயலுமா?

3. ஒரு பண்ணையில் சில ஆடுகளும் கோழிகளும் இருந்தன. ராஜா, அங்கிருந்த வேலையாளிடம் அவற்றின் மொத்த எண்ணிக்கை பற்றிக் கேட்டதற்கு, கண்களின் எண்ணிக்கை 60; கால்களின் எண்ணிக்கை 86 என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். ராஜாவுக்குத் தெரியவில்லை. நீங்கள் கண்டுபிடித்துச் சொல்லுங்கள்?

4. இரண்டு எண்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் 3. அவற்றின் சதுர எண்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் 51. அந்த எண்கள் எவை?

5. அது ஒரு இரட்டை இலக்க எண். முதல் எண்ணில் பாதி இரண்டாம் எண். இரண்டு எண்களையும் கூட்டினால் வரும் எண்ணைக் கொண்டு, அந்த இரட்டை இலக்க எண்ணை வகுத்தால் 7 விடையாக வருகிறது. அந்த எண் எது?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com