சங்கீதா அண்ணாமலை நாட்டியம்
ஏப்ரல் 24, 2005 அன்று புஷ்பாஞ்சலி நாட்டியப் பள்ளியின் செல்வி சங்கீதா அண்ணாமலை அளித்த நாட்டிய நிகழ்ச்சி கப்பர்லி கலையரங்கில் நடந்தேறியது. சங்கீதா, மீனா லோகனின் மாணவி ஆவார். இது கன்கார்டு முருகன் கோவிலுக்கு நிதி திரட்டும் பொருட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஆகும்.

மல்லாரியில் புஷ்பாஞ்சலி தொடங்கி மாண்டு ராகத்தில் தில்லானா வரை அணிவகுத்த சங்கீதாவின் விதவிதமான முகபாவங்கள் பார்வையாளர்களின் மனதைக் கவர்ந்தது.

ரேவதி ராகத்தில் 'சம்போ' பாடலுக்குச் சங்கீதாவின் பாதஅசைவுகளும் சிறப்பான கஞ்சிராவும் வெகு நேர்த்தி. சாருகேசி ராகத்தில் அமைந்த வர்ணத்திற்குச் சங்கீதாவின் அபிநயம் கண்ணனைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது.

'கஞ்சதளாயதாக்ஷ¢', தில்லானா, மற்றும் முத்தாய்ப்பாக ஆடிய காவடிச்சிந்து ஆகியவை சங்கீதாவின் நாட்டியத் தேர்ச்சிக் குச் சான்றுகள்.

ஜெயந்தி உமேஷ் (குரலிசை), சாந்தி நாராயணன் (வயலின்), நாராயணன் (மிருதங்கம், கஞ்சிரா), மீனா லோகன் (நட்டுவாங்கம்) ஆகியோரின் துணை நிகழ்ச்சிக்குச் சிறப்பூட்டியது.

© TamilOnline.com