கத்தரிக்காய் கட்லெட்
தேவையான பொருட்கள்
கத்திரிக்காய் - 2
உருளைக்கிழங்கு - 2
கோதுமை மாவு - 1/4 கிண்ணம்
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
பச்சை மிளகாய் - 4 அல்லது 5
இஞ்சி - சிறிதளவு
முந்திரிப்பருப்பு - 6
மஞ்சள் பொடி - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
பிரெட் க்ரம்ப்ஸ் - சிறிதளவு
எண்ணெய் - தாளிக்க
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்துமல்லி - சிறிதளவு

செய்முறை
உருளை, கத்திரிக்காயைத் தண்ணீரில் வேகக்கவும். உருளைக்கிழங்கு தோலை உரித்து, இரண்டையும் பிசையவும். கடுகு, உளுத்தம் பருப்பு, முந்திரி பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம் தாளித்து, உப்புப் போட்டு, பிசைந்து வைத்துள்ள கத்தரி, உருளையுடன், மஞ்சள்பொடி, கோதுமை மாவு சேர்த்து, கொத்துமல்லி, கறிவேப்பிலை கலந்து சிறு சிறு வடைகளாகத் தட்டி பிரெட் கிரம்ப்ஸில் புரட்டவும். தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் நெய் விட்டுப் பொன்னிறமாக எடுக்கவும். கெச்சப்புடன் சாப்பிட மிகச் சுவையாக இருக்கும்.

தங்கம் ராமசாமி,
நியூ ஜெர்சி

© TamilOnline.com