மதுரை லேடி டோக் கல்லூரி முன்னாள் மாணவியர் சங்கக் கூட்டம்
மதுரை லேடி டோக் கல்லூரி முன்னாள் மாணவியர் சங்கக் கூட்டம் இணையம் வழியே நவம்பர் 28ம் தேதி இந்திய நேரம் இரவு 8 மணி அளவில் தொடங்கி நடந்தது. உலகம் முழுவதிலிருந்தும் இருந்து ஏராளமான முன்னாள் மாணவியர் இதில் பங்கேற்றனர். இந்தக் கல்லூரியை கனெக்டிகட்டைச் சேர்ந்த மிஸ். கேட்டி வில்காக்ஸ் 1948ம் ஆண்டு நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சங்கத் தலைவர் D. ப்ரிஸிலா வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரியின் தலைவி Dr. கிரிஸ்டினா தனது உரையில் அனவரையும் வரவேற்று, கோவிட்-19 காலத்தில் நேர்மறை எண்ணங்கள் கொண்டிருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். கல்லூரியின் ஓய்வுபெற்ற முன்னாள் தலைவர் மிஸ். சாந்தி மானுவெல் அழகான சிற்றுரை வழங்கினார்.

சங்கத்தின் செயலாளர் J. வினிதா ஆண்டறிக்கை வாசித்தார்.

முன்னதாக இணையம்வழி நடைபெற்ற ரங்கோலி மற்றும் ஆங்கில, தமிழ் கட்டுரைப் போட்டிகளில் வெற்றிபெற்றோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. பின்னர் இக்கல்லூரியின் முகநூல் பக்கத்தைத் திறம்பட நிர்வகிக்கும் முன்னாள் மாணவி பானு முருகன் ஆஸ்திரேலியாவிலிருந்து பேசினார். முன்னாள் மாணவியர் பலர் தமது கல்லூரிக் கால அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

நன்றி நவிலலுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.

சரஸ்வதி தியாகராஜன்,
பாஸ்டன், மாசசூஸட்ஸ்.

© TamilOnline.com