பிறர் தர வாரா
குழந்தைகள் கடத்தலை மையமாக வைத்து உருவாகும் படம் 'பிறர் தர வாரா'. ஏ.ஆர். காமராஜ் நடித்து இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இசை ஜாக் வாரியர். முக்கிய வேடங்களில் சம்பத்ராம், ருத்ரன், நிவேதா லோகஸ்ரீ, அபு, ஹரி, புருஷ், சேகர், ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நகரத்தில் குழந்தைகள் கடத்தல் அதிகமாகிறது. குழந்தைகளைக் கடத்துவது யார்? பின்னணியில் இருப்பவர்கள் யார்? கண்டறியச் சிறப்பு அதிகாரி நியமிக்கப்படுகிறார். யார் என்பதை இறுதியில் அறிந்து அதிர்ச்சி அடைகிறார். ஏன் குழந்தைகளைக் கடத்துகின்றனர், அதிகாரி அவர்களை மீட்டாரா என்பதைப் பல்வேறு திருப்பங்களுடன் சொல்கிறது இப்படம்.

அரவிந்த்

© TamilOnline.com