பிசாசு - 2
'பிசாசு' படத்தால் பார்த்தோரை பயமுறுத்திய இயக்குநர் மிஷ்கின், அடுத்து இயக்கும் படம் 'பிசாசு-2.' முதன்மைக் கதாபாத்திரங்களில் ஆண்ட்ரியா, ராஜ்குமார் பிச்சுமணி நடிக்கின்றனர். இசை : கார்த்திக் ராஜா. "பிசாசு-2 முழுக்க முழுக்கப் பேய்க் கதையாகத் தயாராகிறது. இது, சிரிப்புப்பேய் அல்ல. ஆக்ரோஷமான பேய். முதல் பாகத்தைவிட, நூறு மடங்கு அதிகமாகத் திகில் காட்சிகள் இடம்பெறும். மிக பயங்கரமான மிரட்டல்கள் இருக்கும். ஒரு மலைக் கிராமத்தில் சம்பவங்கள் நடப்பதாகத் திரைக்கதை உள்ளது. முழுப் படப்பிடிப்பும் நீலகிரி மாவட்டம் மசனக்குடியில் நடைபெறும்" என்கிறார் இயக்குநர்.

அரவிந்த்

© TamilOnline.com