சாணிக் காயிதம்
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற பல வெற்றிப் படங்களைத் தந்த இயக்குநர் செல்வராகவன், கதாநாயகனாகத் திரைக்கு அறிமுகமாகும் படம் இது. கீர்த்தி சுரேஷ் கதாநாயகி. அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இவர் மாதவன் நடித்த வெற்றிப்படமான 'இறுதிச்சுற்று' படத்திற்கு வசனம் எழுதியவர். இவர் இயக்கிய 'ராக்கி' என்ற படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், புதிதாக இப்படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறார். 80களில் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்திற்கு இசையமைக்கிறார் யுவன்ஷங்கர்ராஜா.

அரவிந்த்

© TamilOnline.com