1. விடுபட்ட இடத்தில் வரவேண்டிய எண் எது?
1 + 3 = 4
2 + 4 = 10
3 + 5 = 18
7 + 10 = ?
2. 50-ஐ அரையால் வகுத்து ஐம்பதைக் கூட்ட என்ன வரும்?
3. 0, 0, 1, 3, 2, 6, 3, 9, 4, 12 ,5, ?
மேற்கண்ட வரிசையில் அடுத்து வரவேண்டிய எண் எது, ஏன்?
4. ஒரு தந்தையின் தற்போதைய வயது, அவரது மகனது வயதின் நான்கு மடங்கு. இன்னும் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மகனின் வயது, தந்தையின் வயதில் சரிபாதியாக இருக்கும் என்றால், இருவரது தற்போதைய வயது என்ன?
5. இரண்டு = 4
மூன்று = 3;
ஐந்து = 3
ஒன்பது = 4
நான்கு = ?
கேள்விக்குறியிட்ட இடத்தில் வரவேண்டிய எண் எது, ஏன்?
அரவிந்த்
விடைகள்1. இந்தக் கணக்கிற்கு இரு விதமாக இருவேறு விடைகளைக் கூறலாம்.
முதல் முறை
---------
1 + 3 = 4
(4) + 2 + 4 = 10
(10) + 3 + 5 = 18
(18) + 7 + 10 = 35
இந்த முறையின்படி விடை = 35
இரண்டாவது முறை
-------------
இதில் முதல் எண்ணுடன் இரண்டாம் எண்ணைப் பெருக்கி, வரும் எண்ணுடன் முதல் எண்ணைக் கூட்ட வேண்டும்.
1 + 3 = 4 = (1 X 3) + 1 = 4
2 + 4 = 10 = (2 X 4) + 2 = 10
3 + 5 = 18 = (3 X 5) + 3 = 18
7 + 10 = ? = (7 X 10) + 7 = 77
இந்த முறையின்படி வரும் விடை = 77
2. அரை = 1/2 = 0.5
50ஐ அரையால் வகுக்க = 50 / 0.5 = 100. அதனுடன் ஐம்பதைக் கூட்ட = 100 + 50 150.
3. எண்களின் வரிசை 0, 1, 2, 3, 4, 5 என்று ஒரு வரிசையிலும், 0, 3, 6, 9, 12 என்று ஒரு வரிசையிலும் அமைந்துள்ளது. ஆகவே, அடுத்து வரவேண்டிய எண் 15.
4. மகனின் தற்போதைய வயது = x
தந்தையின் தற்போதைய வயது = y = 4x;
இன்னும் 30 ஆண்டுகளுக்குப் பின் மகனின் வயது = தந்தையின் வயதில் சரி பாதி = 2(x+30) = (y+30);
2(x+30) = (4x+30)
2x+60 = 4x+30
2x+60 (-)
4x+30
2x = 30;
x = 15;
y = 4x = 60
தற்போது மகனின் வயது = 15; தந்தையின் வயது = 60; (நான்கு மடங்கு)
30 ஆண்டுகளுக்குப் பிறகு தந்தையின் வயது = 90; மகனின் வயது = 45 (சரி பாதி)
5. உண்மையில் இது கணிதம் சார்ந்த புதிர் அல்ல. எழுத்துப் புதிர். இரண்டு என்பதற்கு வந்திருக்கும் '4' என்பது அதில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. அது போலவே மூன்று = 3; ஐந்து = 3; ஒன்பது = 4; இதன்படி நான்கு என்பதைக் குறிக்க '4'.
ஆகவே விடுபட்ட இடத்தில் வரவேண்டிய எண் = 4.