அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
தமிழ் இலக்கியங்கள் கூறும் பெண்களின் நற்குணங்களான் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எல்லாம் அமைந்த ஒரு பெண்ணின் கதை இப்படம். அக்ஷரா ஹாசன் அப்பெண்ணாக நடிக்கிறார். பிரபல பாடகி உஷா உதுப் அக்ஷராவின் பாட்டியாக நடிக்கிறார். உடன் மால்குடி சுபா, ஷாலினி விஜயகுமார், சித்தார்தா சங்கர், சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியன், அஞ்சனா ஜெயப்பிரகாஷ், ஜானகி சபேஷ், கலைராணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசை: சுஷா. இயக்கம்: ராஜா ராமமூர்த்தி.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com