ஜூன் 26, 2005 அன்று சைப்ரஸ் கல்லூரி (சைப்ரஸ், கலி.) வளாகத்தில் சாந்தா மற்றும் வி.பி. தனஞ்சயன் வழங்கும் திருக்குறள் பரதநாட்டியம் நடைபெறும். இதில் பத்மராஜா சகோதரிகளான கவிதா, மீரா மற்றும் அஞ்சனா நடனமாடுவர். இதற்காக தனஞ்சயன் தம்பதிகள் அறவாழ்க்கை குறித்த 27 குறள்களைத் தேர்ந்தெடுத்து நடனம் அமைத்துள்ளனர்.
குறள்களின் பொருள் விளங்குமாறு அவற்றைப் புராணப் பாத்திரங்களின் கதைகளோடு பொருத்தி இந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது. பேரா. டி. பசுபதி (ஓய்வுபெற்ற முதல்வர், S.V. இசைக்கல்லூரி, திருப்பதி) இசை அமைத்துள்ளார். இந்தத் திருக்குறள் இசைப் பாடல்கள் கொண்ட அடர்தகடு (சி.டி) நிகழ்ச்சி நாளன்று விலைக்குக் கிடைக்கும்.
இதில் திரட்டப்படும் நிதி தெற்காசியாவின் ஆதரவற்ற குழந்தைகளுக்குச் செல்லும். நுழைவுச் சீட்டு மற்றும் விவரங்களுக்கு: மங்களா 562.404.2010 யசோ 714.731.7217 சங்கரி 626.441.2019 பவானி 661.722.0263 வசுந்தரா 661.942.2356 |