மாயன்
மலேசியாவைச் சேர்ந்த வினோத் மோகன் கதாநாயகன். பிந்து மாதவி கதாநாயகி. முக்கிய வேடங்களில் ஜான் விஜய், ஆடுகளம் நரேன், கஞ்சா கருப்பு, தெறி தீனா, ராஜசிம்மன், ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியாக இருக்கும் இப்படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார் ராஜேஷ்கண்ணா. ஆங்கிலத்தில் வெளியாகும் படத்தில் பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். இசை: எம்.எஸ். ஜான்ஸ் ரூபர்ட். திகில் கலந்த த்ரில்லர் என்கிறார் கோலிவுட் கோவிந்து.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com