ஜூன் 2, 2005 முதல் ஜூலை மாத இறுதிவரை ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள் அமெரிக்கா மற்றும் கனடாவின் பல ஊர்களுக்கு வருகை தர இருக்கிறார். தன் அணைப்பால் துயருற்றோருக்கு ஆறுதல் தரும் அம்மாவை 'அரவணைக்கும் ஞானி' (Hugging Saint) என்று அழைக்கிறார்கள்.
அம்மா வருகை தர இருக்கும் ஊர்களும், தேதிகளும்: சியாட்டல் ஜூன் 02 - 05 வளைகுடாப் பகுதி 07 - 19 லாஸ் ஏஞ்சலஸ் 21 - 25 சாண்டா ·பி 27 - ஜூலை 01 டால்லஸ் ஜூலை 03 - 04 ·பேர்பீல்ட் 06 - 07 சிகாகோ 09 - 10 வாஷிங்டன் டி.சி. 12 - 14 நியூ யார்க் 16 - 18 பாஸ்டன் 20 - 23 டொரன்டோ, கனடா 25 - 28
இலவச பொது நிகழ்ச்சிகளில் அம்மாவின் தரிசனம், ஆன்மிகச் சொற்பொழிவு மற்றும் பஜனை நடைபெறும். சில ஊர்களில் ஒதுக்கம் (retreat) நடைபெறும் - இதில், ஆன்மீக வகுப்புகள், தன்னலமற்ற சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், ஒருங்கிணைந்த அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெறும்.
மேலும் விபரங்களுக்கு: www.amma.org
சூப்பர் சுதாகர் |