1. 4 + 3 = 127; 7 + 6 = 4213; 9 + 5 = 4514 என்றால் 8 + 9 = ?
2. எண் மூன்றை, ஐந்து முறை மட்டும் பயன்படுத்தி, கணிதச் சமன்பாடுகளின் மூலம் 31 விடை வரவழைக்க வேண்டும். இயலுமா?
3. 9, 81, 324, 576 - இவை ஒன்று முதல் ஒன்பது வரை உள்ள எண்கள் அடங்கிய சதுர எண்கள். இதேபோன்று, 1 முதல் 9 வரை உள்ள எண்கள் மட்டும் அடங்கிய மிகச்சிறிய சதுர எண் எது, மிகப் பெரிய சதுர எண் எது?
4. அது ஓர் இரட்டை இலக்க ஒற்றைப்படை எண். முதல் எண்ணின் பாதி இரண்டாவது எண். அந்த இரட்டை இலக்க எண்ணை, அதன் இரண்டு இலக்கங்களையும் கூட்டி வரும் எண்ணால் வகுத்தால், 7 விடையாக வருகிறது என்றால் அந்த எண் எது?
அரவிந்த்
விடைகள்1. வரிசை கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளது.
4 + 3 = 127 = 4*3 = (12); 4+3 = (7) = 127;
7 + 6 = 4213 = 7*6 = (42); 7+6 = (13) = 4213
9 + 5 = 4514 = 9*5 = (45); 9+5 = (14) = 4514
ஆகவே வரிசையில் அடுத்து வர வேண்டியது = 8 + 9 = 8*9 = (72); 8+9 = 17 = 7217.
2. இயலும்.
33 + 3 + 3/3 = 27 + 3 + 1 = 31.
3.மிகச்சிறிய சதுர எண் = 139854276 (11826^2 = 11826 X 11826 = 139854276)
மிகப் பெரிய சதுர எண் = 923187456 (30384^2 = 30384 X 30384 = 923187456)
4. அந்த எண் = 84.
முதல் எண்ணின் பாதி இரண்டாவது எண் = 8/2 = 4
அந்த எண்ணை, இரண்டு இலக்கங்களையும் கூட்டி வரும் எண்ணால் வகுத்தால் = 84/(8+4) = 7