தேவையான பொருட்கள் கோதுமை மாவு - 1/2 கிண்ணம் பாதாம் பொடி - 1/4 கிண்ணம் கசகசா (வறுத்துப் பொடித்தது) - 2 மேசைக்கரண்டி ஏலக்காய்த்தூள் - சிறிதளவு சர்க்கரை (பொடியாக) - 1 1/2 கிண்ணம் எண்ணெய் - பொரிக்க நெய் - 1/4 கிண்ணம்
செய்முறை கோதுமை மாவு, பாதாம்பொடி, கசகசாப் பொடி கலந்துகொண்டு, தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். இதைச் சிறுசிறு அப்பளங்களாக இட்டு, எண்ணெய் காய்ந்ததும் பொரித்து, மிக்ஸியில் அரைத்து, சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி சேர்த்துக் கலக்கவும். நெய்யை உருக்கிச் சூடாக ஊற்றி உருண்டைகளாகப் பிடிக்கவும். இதற்கு நெய் அதிகம் தேவையில்லை. சிறிதளவே விட்டுப் பிடிக்கலாம். சுவையோ சுவை!
தங்கம் ராமசாமி, பிரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்சி |