பன்றிக்கு நன்றி சொல்லி
நகைச்சுவைப் படம்னு தலைப்பைப் பார்த்தாலே தெரியுதா? முழுக்க முழுக்கப் புதுமுகங்கள் நடிக்கும் படம் இது. நாயகனாக அறிமுகமாகிறார் நிஷாந்த். இசை: சுரேன் விகாஷ். பாலா அரன் இயக்குகிறார். பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சிலையைத் தேடிடும் பயணம்தான் இப்படத்தின் கதையாம். அது குறித்த ஒரு முக்கியமான குறிப்பு நாயகனுக்குக் கிடைக்கிறது. அதைத் தெரிந்துகொண்ட இருவர், நாயகனைத் துரத்துகிறார்கள். பிறகு என்ன நடந்தது என்பதுதான் படம். பன்றி வரட்டும், பார்க்கலாம்.

அரவிந்த்

© TamilOnline.com