தாழ் திறவா
கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன் நாயகனாக நடிக்கும் படம் இது. வாணி போஜன் கதாநாயகி. உடன் சுப்பு பஞ்சு, சுரேஷ் மேனன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசை: சந்தோஷ் தயாநிதி. இயக்கம்: அறிமுக இயக்குநர் பரணி சேகரன். இயக்குநர் சொல்கிறார்: "ஒரு சின்ன ஊருக்குள் தொல்பொருள் சோதனை நடக்கிறது. அங்கு மறைந்திருக்கும் நாகரிகம் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார்கள். அதனால் ஏற்படும் பிரச்சனைகளை ஒவ்வொன்றாக எப்படி ஒரு குழு சரிசெய்கிறது என்பதுதான் படத்தின் கதை". தாழ் திறக்கட்டும்.

அரவிந்த்

© TamilOnline.com