கேக்காது
படத்தில் நாயகனாக, கன்னடத் திரையுலகின் கதாநாயகன் சாகர் அறிமுகமாகிறார். நாயகியாக, நடிகரும், இயக்குநருமான 'யார்' கண்ணனின் மகள் சாயாதேவி அறிமுகமாகிறார். உடன் சமுத்திரக்கனி, பிரதாப் போத்தன், மனோபாலா, ஏ.எல். அழகப்பன், மயில்சாமி, வையாபுரி, நெல்லை சிவா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார், ரோஜர் டேனி. படம்பற்றி இவர், "வெளிப் பயன்பாட்டுக்கு மட்டுமே இருந்துவரும் அறிவியல் வருங்காலத்தில், 'சிப்' வடிவில் மனித உடலுக்குள் புகுந்து ஆட்டுவிக்கப் போகிறது. இதற்கான வேலை ஒரு நாட்டில் ரகசியமாக நடக்கிறது. இதைக் கதாநாயகன் கண்டுபிடிக்கிறான். மனித உடலுக்குள் புகும் சிப் என்னவெல்லாம் செய்யும் என்பதை அறிந்து அதிர்கிறான். அதனால் நடக்கும் விறுவிறுப்பான சம்பவங்கள்தான் படத்தின் கதை" என்கிறார். காது கேட்டால் சரி.

அரவிந்த்

© TamilOnline.com